Wed. Dec 7th, 2022

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, IPL 2022, Perarivalan released, Tomato price hike, LPG cylinder price hike – 19 May 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3 உயர்ந்து ரூ. 1,018 ஆகவும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 8 உயர்ந்து ரூ. 2,507க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இம்மாதத்தில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இரு முறை உயர்ந்துள்ளது. முதல் முறை, ரூ.50 அதிகரித்து 1,015 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

IPL 2022: லக்னோ அணி திரில் வெற்றி!

ஐபிஎல் போட்டியில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய லக்னோ அணி, 20 ஓவரில் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன்மூலம் லக்னோ அணி 14 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்று,  பிளே ஆஃப் சுற்றுக்குள் 2வது அணியாக நுழைந்தது.

Tamil News Latest Updates

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையால், கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பேரறிவாளனை கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!

30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன் – முதல்வர் ஸ்டாலின்!

நடிகர் விஜய், தெலங்கானா முதல்வர் சந்திப்பு!

நடிகர் விஜய், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ்வை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

Thank You

Leave a Reply

Your email address will not be published.