Fri. Dec 2nd, 2022

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் இன்றிரவு திடீரென மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,


குறித்த ஆசிரிய மாணவன் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இருந்துள்ளார்.தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் உறங்கியுள்ளார்.

காய்ச்சலால் மாணவன் அவதி

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் இன்றிரவு ஆசிரிய மாணவனுக்கு நேர்ந்த துயரம் | Vavuniya National College Student Dies Suddenly


உணவு வாங்கிக்கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சலால் மாணவன் அவதிப்பட்டுள்ளார்.




இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாணவன்

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் இன்றிரவு ஆசிரிய மாணவனுக்கு நேர்ந்த துயரம் | Vavuniya National College Student Dies Suddenly



விவசாய பாடப்பிரிவின் முதலாம் வருட ஆசிரிய மாணவனான மட்டக்களப்பு, காரைதீவினைச் சேர்ந்த ஜிந்துஜன் என்பவரே மரணமடைந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.