Fri. Dec 2nd, 2022

பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யாரும் நிரபராதிகள் அல்ல, கொலைக்காரர்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவை பலரும் பாராட்டிவருகிற நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ட்வீட் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபாரதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thank You

Leave a Reply

Your email address will not be published.