Fri. Dec 2nd, 2022

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (29) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமானார்.

இன்று அதிகாலை கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவர் கட்டாருக்கு பயணித்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர அதிகாரி கூறினார்.

கட்டாரிலிருந்து அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்கா பயணிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது வௌிநாட்டு பயணத் தடை தொடர்பிலான பிரச்சினை காரணமாக திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.