Fri. Dec 2nd, 2022

Published by T. Saranya on 2022-05-18 16:59:17

13 ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு திருச் செபமாலை பவனி மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் துறவிகள் பொதுநிலையினர் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.

இன்று (18) காலை இவர்கள் மன்னார் தீவின் நுழைவாயிலில் அமைந்துள்ள மருதமடு அன்னை வீற்றிருக்கும் திருச்சொருப வளாகத்தில் ஒன்றுகூடி அங்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளாரால் திருச் செபமாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்தோடு, மரணித்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருச் செபமாலை ஓதப்பட்ட நிலையில் இவ் செபமாலை பவனி மன்னார் பேராலயம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

அங்கே மரணித்தவர்களை நினைவு கூர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும்  கூடியிருந்த மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் 13வது நினைவின் நற்கருணை வழிபாடு இடம்பெற்றதுடன் ஆயர் அவர்களால் நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.