Wed. Dec 7th, 2022

எஸ்.ஜே.பிரசாத்

“அல்­ககோல்” என்ற வார்த்தை மது­வுடன் தொடர்புபடுத்தி மாறி மாறி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இலங்­கையில் உள்ள மது­பான விற்­பனை நிலை­யங்கள் மது­பானக் கடைகள் என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றன. 

இந்த வார்த்தை இந்­தி­யா­வி­லி­ருந்து நம் மொழியில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கலாம். கி.மு 3000–-2000 க்கு இடையில் இந்­தி­யாவில் அரி­சி­யி­லி­ருந்து தயா­ரிக்­கப்­பட்ட ஒரு வகை மது­பானம் பாவனையில் இருந்­துள்­ளது, 

அது “சூரா” என்று அழைக்­கப்­பட்­டது. கி.மு. 2700 இல் பாபி­லோ­னி­யர்கள் “போதையின் தேவ­தையை” வணங்­கினர் என்­ப­தற்கும் பண்­டைய சான்­றுகள் உள்­ளன.

பண்­டைய இலங்­கை­யில் பல்­வேறு வகை­யான மது­பா­னங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தற்கும், அர­சர்கள் கூட குடித்­து­விட்டு போதையில் இருந்­த­தற்கும் பல ஆதாரங்கள் உள்­ளன.

எனினும், ஐரோப்­பியப் படை­யெ­டுப்­பு­க­ளுக்குப் பின்னர் இலங்­கையில் மது­பான உற்­பத்­தியும் வர்த்­த­கமும் மிகவும் ஒழுங்­க­மைக்­கப்­பட்­டன. 

போர்த்­துக்­கேயர், டச்சு மற்றும் ஆங்­கி­லே­யர்­களால் இலங்கை சமூ­கத்தில் மது பிர­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டது என்பது மறுப்­ப­தற்­கில்லை.

இலங்­கையில் மது­பான உற்­பத்தி மற்றும் விற்­ப­னையை ஐரோப்­பி­யர்கள் முறைப்­ப­டுத்­தாத வரை, நாட்டில் மது­பானம் எப்­படி தயா­ரித்­தார்கள் என்­ப­தற்­கான  தெளி­வான ஆதாரங்கள் கிடைக்­க­வில்லை. 

கித்துல், தேங்காய் துருவல், கறிவேப்­பிலை என நம் சமூ­கத்தில் இதிலிருந்து தயாரிக்கப்பட்ட   பானங்கள் தான் இருந்­துள்­ளன. ஆனாலும் இவை போதைத் தரக்­கூ­டி­யவையா என்­பது கேள்­விதான்.

ஆனால் ஐரோப்­பி­யர்கள்  தான் நம்  நாட்­டுக்கு வைன், பியர் மற்றும் சாரா­யத்தை அறி­மு­கப்­ப­டுத்­தினர். 

இவ்­வா­றான பானங்கள் இலங்­கைக்கு வரு­வ­தற்கு முன்­னரே வேறு நாடு­களின் வர்த்­த­கர்­களால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கக் கூடும், 

ஆனால் அவை பொதுச் சமூ­கத்தில் இருந்­த­தற்­கான சான்­றுகள் இல்லை. சில சம­யங்­களில் வைன், பியர் குடிப்­பது அரசர் உள்­ளிட்ட உயர்­கு­டி­யி­ன­ருக்கு மட்­டுமே அனு­ப­வ­மாக இருந்­தி­ருக்­கலாம்.

போர்த்­துக்­கே­யர்கள் மது­பான வியா­பாரம் செய்­தார்கள் என்­ப­தற்கு தெளி­வான ஆதாரங்கள் இல்லை. 

ஆனால் டச்­சுக்­கா­ரர்கள் நாட்டில் தொடர்ந்து சாராயம் உற்­பத்தி செய்­தனர் என்று சொல்­லப்­ப­டு­கி­ன்றது.

1796 ஆம் ஆண்டு இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆங்­கி­லே­யர்கள் கைப்­பற்­றிய பின்னர், மது­பான ஆலை மற்றும் சில்­லறை வர்த்­தகம் ஆகிய இரண்­டையும் இலங்­கை­யர்­க­ளி­டமே ஒப்­ப­டைத்­ததன் மூலம் அது விரை­வான விரி­வாக்­கத்­திற்கு வழி­வ­குத்­தது மற்றும் அர­சாங்க வரு­மா­னத்தின் முக்­கிய ஆதா­ர­மாக மாறி­யது.

சாராய உற்­பத்­தியும் விற்­ப­னையும் ஒரு இலா­ப­க­ர­மான வணி­க­மான மாறி­யது. இது பல வரு­ட  கடின உழைப்பு இன்றி  சிறிய மூல­த­னத்­துடன் தொடங்­கப்­பட்­டது. 

இதனால் பல உள்­ளூர்­வா­சிகள் சாராயத் தொழி­லுக்குத் திரும்­பி­னார்கள். 

ஆனால் பெரும்­பா­லான இலா­பங்கள் மொத்த விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கும் சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கும் சென்­றது.

மேலும் உற்­பத்­தி­யாளர் எப்­போதும் குறைந்த வரு­மா­னத்தை தான் ஈட்­டுகி றார்கள் என்றும் கூறப்­ப­டு­கி­றது. 

ஆங்­கி­லே­யர்கள் சாரா­யத்தின் உற்­பத்தி, மொத்த விற்­பனை மற்றும் சில்­லறை வர்த்­த­கத்தை உள்ளூர் மக்­க­ளுக்கு வழங்­கும்­போது, அரச ஊழி­யர்­க­ளுக்கும் அதில் வாய்ப்­ப­ளித்­துள்னர். 

சாராய சில்­லறை வர்த்­த­கத்தில் இலங்­கை­யர்கள் அதிக இலாபம் ஈட்டிக் கொண்ட­னர்.

ஆனால் உழைக்கும் ஏழைகள் மத்­தியில் அதற்­கான சந்தை இல்லை. கிரா­மப்­பு­றங்­களில் அதற்­கான சந்தை இல்லை. கொழும்பு மேற்கு, கண்டி மத்­திய, காலி மற்றும் யாழ்ப்­பாணம் மற்றும் குரு­நாகல் மாவட்­டங்­களில் இதற்­கான சந்தை அமைந்­தி­ருந்­ததாம்.

சாராய விற்­ப­னைக்குத் தேவை­யான தொகை அர­சாங்க அதி­பரால் வழங்­கப்­பட்­டது. அதுவும் ஏலம் மூலம். இந்த ஏலத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட விலை­ம­னுக்கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு, அனு­ம­திக்­காக கொழும்பு கால­னித்­துவ செய­லா­ள­ரிடம் தெரி­விக்­கப்­பட்­டது.

தவ­றணையின் வாட­கையை கச்­சே­ரிக்கு மாத தவ­ணை­யாக செலுத்த வேண்டும். எனவே, அடிப்­படை மூல­தனம் இல்­லாமல் கூட, வியா­பா­ரத்தில் யார் வேண்­டு­மா­னாலும் ஈடு­ப­டலாம்.

மது­பான தொழில் முற்­றிலும் அர­சாங்­கத்தால் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. சாராய உற்­பத்­தி­யா­ளர்கள் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து வரு­டாந்­த உரி­மங்­களைப் பெற வேண்டும். 

மேலும் மொத்த விற்­ப­னை­யா­ளர்கள் தங்கள் அனைத்து தயா­ரிப்­பு­க­ளையும் அர­சாங்­கத்­திற்கே விற்க வேண்டும். 

பின்னர் அரசு அவற்றை பலத்த பாது­காப்­புடன் சேமித்து விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு கொண்டு செல்லும். 

சாராயம் கடத்­தப்­ப­டு­வதைத் தடுக்க நகரின் மையப் பகு­தியில் பாது­காப்புப் படை­யி­னரும் நிறுத்­தப்­பட்­டனர். 

ஒவ்­வொரு பகு­தி­யிலும் உள்ள அரச முக­வர்கள் தங்கள் பகு­திக்கு தேவை­யான சாராய தொகையை  எடுத்து உள்ளூர் விற்­பனை   உரி­மை­யா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கித்­தனர்.

புர­வ­லர்கள் காவல்­துறை மற்றும் நீதி­மன்­றங்கள் போன்ற அரசு நிறு­வ­னங்­க­ளுடன் நேரடித் தொடர்பைப் பேணி, வர்த்­த­கத்தை நிர்­வ­கிப்­ப­தற்கும் சட்­ட­வி­ரோத விற்­ப­னையைத் தடுப்­ப­தற்கும் அர­சாங்­கத்தின் உத­வியை நாடினர். 

இது நாட்டின் அந்­நிய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு உட்­பட்ட குடி­மக்கள் முத­லா­ளித்­துவக் குழுவை உரு­வாக்­கி­யது. 

  கோட்­டை­களில் நிலை­கொண்­டி­ருந்த துருப்­புக்­க­ளுக்கும் மது­பானம் விநி­யோ­கிக்­கப்­பட்­டது. 

1820 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் கண்டிப் பகு­தியில் மது விற்­பனை நீ­டிக்­கப்­பட்­ட­துடன் கண்­டியில் சட்­ட­வி­ரோ­த­மான வர்த்­தகம் நிறுத்­தப்­பட்டு சட்­டப்­பூர்வ வர்த்­தகம் ஸ்திர­மா­னது.

ஆங்­கி­லேயர் ஆட்­சியின் போது, பாதை அமைக்கும் தொழி­லா­ளர்கள் மற்றும் உள்ளூர் விவ­சா­யி­க­ளி­டையே தான் மது­பானம் முதலில் பிர­ப­ல­ம­டைந்­தது.

அப்­போ­தி­ருந்து, கோப்பி விவ­சா­யி­களும் மது­பா­னங்­களை அதிகம் வாங்­கு­ப­வர்­க­ளாக மாறி­விட்­டனர். பெருந்­தோட்டப் பொரு­ளா­தா­ரத்தை நாடு முழு­வதும் பரப்­பிய பிரிட்டிஷ் ஆட்­சி­யா­ளர்கள், நாட்டின் பாரம்­ப­ரிய சமு­தா­யத்தின் மீது   ஒழுங்­க­மைக்­கப்­பட்ட மற்றும் திற­மை­யான முறையிலான  மது­பான வணி­கத்தை திணித்­தனர். மேலும் இது புதிய வாழ்க்கை முறையின் இன்­றி­ய­மை­யாத அங்­க­மாக மாற்­றப்­பட்­டது.

இலங்­கையில் சாராய கடத்தல் தொடர்­பிலும் பல்­வேறு தக­வல்கள் காணப்­ப­டு­கின்­றன. 1820 ஆண்­ட­ளவில் கண்­டி­யி­லி­ருந்து பதுளை கச்­சே­ரிக்கு 50 பீப்­பாய்கள் ஏற்­றப்­பட்ட சுமார் 50 மாட்டு வண்­டிகள் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. 

1827ஆம் ஆண்டு 77 கலன் சரக்­குகள் காணாமல் போனமை தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ளது.

அப்­போது சட்­ட­வி­ரோத மது­பான வியா­பா­ரத்தில் ஈடு­பட்­ட­வர்கள் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்கியவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்து அறவிடப்பட்ட அபராதத் தொகையில் பாதி செலுத்தப்பட்டுள்ளது.

தோட்டங்களில் மட்டுமல்ல, கட்டுமானத் தளங்களிலும், சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியிலும், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை கட்டுபவர்களிடையேயும் மது பழக்கமாகி இருந்தது. 

கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் கூட கடுமையாக மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாயினர். மக்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவர்களின் நுகர்வு மேலும் அதிகரித்தது. மெல்ல மெல்ல அதற்கு அடிமையாகினர். 

இதனால், மதுபான சில்லறை விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. மிகவும் ஏழ்மையான மக்கள் பிரிவினர் மதுவுக்கு அடிமையான போது, அரசாங்கமும் முதலாளித்துவமும் அவர்களைச் சுரண்டியது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.