Wed. Dec 7th, 2022

வட மாகாண காணிகள் முப்படையினருக்காக சவீகரிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

இந்த கூட்டம் இன்று மதியம் இடம்பெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முற்றுகைப் போராட்டம்

படையினருக்கு காணி சுவீகரிப்பு - எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்களிடம் கடுமையான வார்த்தை பிரயோகத்தில் ஆளுநர்! | Northern Province Governor Against Protest Police

காணி சுவீகரிப்புத் தொடர்பான கூட்டத்திற்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி திணைக்கள பிரதிநிதிகள் ஆகியோர், இக்கூட்டத்திற்கு ஆளுநரால்  அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகளுக்கு இடமளிக்கமாட்டோம் என தெரிவித்து முற்றுகை  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனையடுத்து கூட்டத்திற்கு சென்ற அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் கூட்டம் இணையவழியில் நடத்தப்பட்டது.

இதன் போது போராட்ட இடத்துக்குச் சென்ற ஆளுநர் மக்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இங்கே யாரும் கத்தக் கூடாது. என்னுடைய வேலையை எனக்குப் பார்க்கத் தெரியும். உங்கள் பிரச்சினையை மட்டும் கூறுங்கள். காணி வழங்குவதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

காவல்துறை தள்ளுமுள்ளு

படையினருக்கு காணி சுவீகரிப்பு - எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்களிடம் கடுமையான வார்த்தை பிரயோகத்தில் ஆளுநர்! | Northern Province Governor Against Protest Police

என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லத் தேவையில்லை” என்று காரசாரமாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குத் மக்கள், “எங்களின் காணிகள் எமக்கு வேண்டும். இனியும் காணிகள் அபகரிக்கக்கூடாது என்று கோஷமிட்டுள்ளனர்”. அதனையடுத்து ஆளுநர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாக போராட்டகாரர்கள் ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டவாறு இருந்த நிலையிலும் முப்படையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கூட்டம் இடம்பெறுவதாக தெரியவருகிறது. இதன்போது போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கம் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.