Thu. Dec 1st, 2022

நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மரணம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டம் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.