Sat. Dec 3rd, 2022

தென்கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சியோலில் இன்றிரவு Halloween கொண்டாட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் சுமார் 150 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் தென்கொரியாவின் தீயணைப்புத் துறை மற்றும் பாதுகாப்பு தரப்பு ஈடுபட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்றுக்குப் பின், முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், மக்கள் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்ற அவசரகால செய்தியொன்று யோங்சான் மாவட்டத்தில் உள்ள அனைவரின் தொலைபேசிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.