Wed. Dec 7th, 2022

எதிர்வரும் பண்டிகை காலம் நிறைவு பெறும் வரை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலையை 250 ரூபாவாக வைத்திருக்க முடியும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு வெதுப்பக உரிமையாளர்களிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


1 கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 250 ரூபாவாக நேற்று (29.10.2022) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலை 

கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு | Change In Price Of Wheat Flour

ஒக்டோபர் 28 முதல் டிசம்பர் 31 வரை நடைமுறைக்கு வரும் வகையில் திறந்த கணக்கு மூலம் கோதுமை மாவை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்ததன் விளைவாக கோதுமை மா குறைப்பு ஏற்பட்டது.


எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும், வெதுப்பக பொருட்களின் விலைகள் குறையவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். 

தகவல்

Leave a Reply

Your email address will not be published.