Sat. Dec 3rd, 2022

டி20 உலகக் கிண்ணத் தொடரில் கிறிஸ் கெயிலை பின்தள்ளி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டி20 உலகக் கிண்ணம் 2022 – ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022

டி20 உலகக் கிண்ணத் தொடரில் கிறிஸ் கெயிலை பின்தள்ளி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விராட் கோலி, 44 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன்மூலம் T20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்த கிறிஸ் கெயிலை (965 ஓட்டங்கள்) பின்தள்ளி விராட் கோலி (989 ஓட்டங்கள்) இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

விராட் கோலி ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அதேபோல, அவர் நடப்பு உலகக் கிண்ணத் தொடரிலும் 2 அரைச் சதங்களை விளாசி அசத்தி வருகிறார்.

இவர் தற்போது வரை 23, T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 989 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார்.

இவர் 31, டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடி 1016 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

எனவே, மஹேவ ஜெயவர்தனவின் சாதனையை முறியடிக்க விராத் கோலிக்கு இன்னும் 27 ஓட்டங்களே தேவைப்படுகின்றன.

இதேவேளை, இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தற்போது வரை 35, T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 904 ஓட்டங்களைக் குவித்து 4ஆவது இடத்தில் உள்ளார்.

டி20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள்

ஜெயவர்தன – 1016 ஓட்டங்கள் – 31 போட்டிகள்
விராட் கோலி – 989 ஓட்டங்கள் – 23 போட்டிகள்
கிரிஸ் கெயில் – 965 ஓட்டங்கள் – 33 போட்டிகள்
ரோஹித் சர்மா – 904 ஓட்டங்கள் – 35 போட்டிகள்
தில்சான் – 897 ஓட்டங்கள் – 35 போட்டிகள்

.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.