Fri. Dec 2nd, 2022

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.



இது உலக அளவில், யார் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராக பதவியேற்பார் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பு

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ட்ரம்பின் அறிவிப்பு | Us Presidential Election Race Trump Comeback



கடந்த சில தினங்களுக்கு முன், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை ட்ரம்ப் இன்று(16) வெளியிட்டுள்ளார்.


கடந்த 2016இல் அமெரிக்க அதிபர் பதவியை ஏற்ற ட்ரம்ப், 2020இல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்ததுடன், தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறிவந்தார்.



பின், தனக்குத் தானே சமாதானம் அடைந்து, அந்த முடிவை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.