Wed. Dec 7th, 2022

 லத்தீப் பாரூக்

உலக இராணுவ செலவினம் முதல் தடவையாக இரண்டு ட்ரில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது. ஸ்டொக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிலையம் (SIPRI) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஏப்பிரல் 25இல் உலக இராணுவ செலவினம் 2113பில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது.

2017 முதல் 2021 வரையான ஐந்து பிரதான ஆயுத ஏற்றுமதியாளர்களாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனி என்பன காணப்படுகின்றன.

இந்தியா, சவூதி அரேபியா, எகிப்து, அவுஸ்திரேலியா மற்றும் சீனா என்பன மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடுகளாகக் காணப்படுகின்றன.

கொரோனா நோய்ப்பரவல் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் உலக இராணுவச் செலவு உச்சத்தைத் தொட்டுள்ளது என்று சர்வதேச சமாதான ஆய்வு நிலையத்தின் இராணுவ செலவுகள் மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டங்களின் சிரேஷ்ட ஆய்வாளர் காலாநிதி டியாகோ லோப் த சில்வா தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க ஈரானில் 1979இல் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டபோது மேலைத்தேச ஆதரவு பெற்ற ஷாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது.

ஆயுதங்களுக்கான சிறந்த சந்தையாக அன்றைய ஈரான் காணப்பட்டது. இந்த புரட்சிக்குப் பின் மேற்குலகமும் சவூதி அரேபியாவும் விழித்துக் கொண்டன.

ஈராக்கில் ஏற்பட்ட குழப்ப நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், சவூதி மற்றும் வளைகுடாவின் பொம்மை அரசுகள் என்பன இணைந்து ஈரானைப் போலவே எண்ணெய் வளம் கொண்ட மற்றொரு நாடான ஈராக்கை அதன் மீது தூண்டிவிட்டன.

இதன் விளைவாக எட்டு வருடங்களாக அந்தப் பிராந்தியத்தில் யுத்தம் நீடித்தது. இரண்டு நாடுகளுமே அதில் நாசமாக்கப்பட்டன. பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியானார்கள்.

அத்துடன்,  அமெரிக்கா , ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிய ஆயுத உற்பத்தித் துறை 800 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வருமானமாக ஈட்டிக் கொண்டது.

இந்த யுத்தத்தின் பின் வங்குரோத்து நிலையை அடைந்த ஈராக் குவைத்துடன் எல்லைத் தகராறை ஏற்படுத்தியது. பணம் சம்பாதிப்பதே ஈராக்கின் குறிக்கோளாக இருந்தது.

இந்த நிலைமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்கா ஈராக்கில் உள்ள அதன் அன்றைய தூதுவர் ஏப்பிரல் கெஸ்பியை ஈராக் ஜனாதிபதியிடம் தூதுவிட்டது. 

சதாம் ஹ{ஸேனுக்கு தவறான தகவல்களை அனுப்பி ஈராக் குவைத் விடயத்தில் தலையிட்டால் அதை அமெரிக்கா கண்டு கொள்ளாது. அதை இரண்டு அரபு நாடுகளுக்கு இடையிலான விவகாரமாகவே அமெரிக்கா நோக்கும் என்று சதாமுக்கு கூறப்பட்டது.

இதனால் உற்சாகம் அடைந்த சதாம் குவைத் மீது படையெடுப்பை மேற்கொண்டார். ஆனால் அமெரிக்கா குவைத்தை காப்பாற்றுவதாகவும் கூறிக் கொண்டு அந்த விடயத்தில் தலையிட்டது.

தனது தலைமையில் பல நாடுகளைக் கொண்ட படையை திரட்டி ஐக்கிய நாடுகள் சபையில் அதற்கு சாதகமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஈராக் மீது படையெடுப்னை முன்னெடுத்து குவைத்தையும் சேர்த்து நிர்மூலமாக்கியது.

பின்னர் அமெரிக்கா இந்த யுத்தத்துக்காக தனக்கு ஏற்பட்ட செலவினம் எனக்கூறி சவூதி மற்றும் வளைகுடா கூஜா தூக்கி அரசுகளிடம் இருந்து 70 பில்லியன் டொலர்களையும் பெற்றுக் கொண்டது. அது மட்டுமல்ல இதன் மூலம் இஸ்ரேலுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இன்னும் பல தலைமுறைகளுக்கு அரபு நாடுகள் மத்தியில் ஒற்றுமை ஏற்படா வண்ணம் பிளவுகள் ஏற்படுத்தப்பட்டன. 

ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி வளத்தை சிதைக்கும் நோக்குடன் அந்நாட்டிடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாக ஒரு போலிக் குற்றச்சாட்டை முன்வைத்து மீண்டும் அமெரிக்கா தலைமையில் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் அவ்வாறான ஆயுதங்கள் எதுவும் ஈராக்கிடம் இருக்கவில்லை என்பது ஐ.நா. ஆயுதப் பரிசோதகர் ஸ்கொட் ரிட்டர் சமர்ப்பித்த பல அறிக்கைகளில் இது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த மோதல்களின் போதும் கூட அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் ஆயுத உற்பத்தித் துறைதான் செழித்தோங்கியது. அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்து அரபு வசந்தம் ஆரம்பமானபோது இதே நாசகார சக்திகள் அந்த நிலையையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டன.

லிபியாவும் சிரியாவும் கொலைகளங்களாக மாற்றப்பட்டன.

இந்த நிலைமகள் பற்றி கருத்து வெளியிட்ட நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரபலமான இலங்கை ஊடகவியலாளர் தாலிப் டீன், வீரகேசரிக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த ஆண்டில் முதல் தடவையாக உலக இராணுவ செலவினங்கள் இரண்டு ட்ரில்லியன் டொலர்களை எட்டியுள்ளன.

இதன் மூலம் உலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து தங்கு தடையின்றி ஆயுத விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவது அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

தற்போது இடம்பெற்று வரும் ஆயுத மோதல்களும் ஆப்கானிஸ்தான், ஈராக், யேமன், சிரியா, மியன்மார், லிபியா ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தங்களும் உலக ஆயுத உற்பத்தியாளார்களிடம் தமது உற்பத்திகளுக்கான நல்ல மவுசை ஏற்படுத்தி உள்ளன.

பெரும்பாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரித்தரினா ஆகிய நாடுகளே இதனால் பெரும் நன்மை அடைந்துள்ளன.

இந்த நாடுகள் தான் ஐ.நா. பாதகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருப்பதும் கவலைக்குரியது.

ஐ.நா. சாசனத்தின் படி சர்வதேச ரீதியாக சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது தான் இந்த நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட ஆணை.

ஆனால் இந்நாடுகள் யேமனில் ஏற்பட்டுள்ள மோதல்கள் சவூதி அரேபியாவுக்கு பிரான்ஸ{ம் அமெரிக்காவும் வழங்கிய ஆயுதங்களால் ஊக்குவிக்கப்பட்டு மோசமான கட்டத்துக்கு வந்துள்ளன.

அதேபோல் ரஷ்யா, சிரியாவில் அரச படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி உள்ளது. மியன்மாருக்கு பிரதான ஆயத விநியோகஸ்தர்களாக சீனா காணப்படுகின்றது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் நீடித்த 20வருட கால ஆக்கிரமிப்பு கடந்த வருடம் ஓகஸ்ட்டில் நிறைவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் மிக நீளமான இந்த ஆக்கிரமிப்பின் போது அமெரிக்க இராணுவத்துக்கும் ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கும் தேவையான ஆயுதங்களை விநியோகிஸ்தவர்கள் மேற்கண்ட தரப்பினர் தான். 

“நாங்கள் ஆப்கானிஸ்தானில் சுமார் மூன்று இலட்சம் பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் இராணுவத்தை பயிற்றுவித்து அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக இந்த பணத்தை நாம் செலவிட்டுள்ளோம்.

உண்மையில் அவர்களுக்கு சிறந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எமது நேட்டோ அணியில் உள்ள பல நாடுகளின் இhணுவத்தை விட இது பன்மடங்கு அதிகமானது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு ட்ரில்லியன் பெருந்தொகையில் 83பில்லியன் டொலர்கள் இராணுவத்துக்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இது வருடாந்தம் நான்கு பில்லியன்களுக்கும் அதிகமானதாகும்.

ஆப்கானிஸ்தான் போரானது 2400க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினரின் உயிர்களையும் 3800க்கும் அதஅமெரிக்க தனியார் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களின் உயிர்களும் பறிபோயுள்ளன. அதேபோல் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 

தகவல்

Leave a Reply

Your email address will not be published.