Sat. Dec 3rd, 2022

சர்வதேச துடுப்பாட்ட பேரவை ( ICC)  2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண  துடுப்பாட்ட போட்டி தொடருக்கான தீர்மானம் ஒன்றை வெளியிட்டள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கிண்ண துடுப்பாட்ட தொடரை இலங்கையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பேரவையினல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உலகக்கிண்ணம்

இலங்கை ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல் - சர்வதேச துடுப்பாட்ட பேரவை விடுத்த அறிவிப்பு | Cricket Srilank Icc World Cup

2025 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை மலேசியா மற்றும் தாய்லாந்திலும் 2027 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் கூட்டாக நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.