Sat. Dec 3rd, 2022

விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தக்ப்போவதாக வெளியான செய்திகளை குறித்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


இந்திய உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி வெளியான இந்த செய்திகள் இலங்கை ஊடகங்களால் பரவலாக பகிரப்பட்டது.


இதேவேளை, இதை குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள்! - பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிக்கை


குறித்த அறிக்கையில்,


மே 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி 13 ஆம் மே 2022 அன்று இந்தியாவில் வெளியாகும் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பில் வினவிய இந்திய புலனாய்வுப் பிரிவினர், அந்தத் தகவல் பொதுவான தகவலாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.


எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் அனைத்துத் தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கும் அதே வேளையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன”, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.