Fri. Dec 2nd, 2022

டி20 உலகக் கிண்ணத் தொடரில் சுப்பர் 12 சுற்றுப் போட்டியொன்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (29) சிட்னி நகரில் மோதுகின்றன.

டி20 உலகக் கிண்ணத் தொடரில் சுப்பர் 12 சுற்றுப் போட்டியொன்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (29) சிட்னி நகரில் மோதுகின்றன.

நியூசிலாந்து பதிலடி?

2019ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. அந்த தொடரை நியூசிலாந்து 2-1 என கைப்பற்றியது.

எனினும், தொடரின் மூன்றாவது போட்டி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அந்தப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் லசித் மாலிங்க தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மேலும், மொத்தமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியினையும் உறுதி செய்திருந்தார்.

2014ஆம் ஆண்டின் பின் T20 உலகக் கிண்ணப் போட்டியொன்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் முறையாக இன்று சந்திக்கின்றன. கடைசியாக இரண்டு அணிகளும் விளையாடிய T20 உலகக் கிண்ண மோதலில் இலங்கை அணி நியூசிலாந்து அணியின் T20 உலகக் கிண்ண கனவினையே கலைத்தது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி கடந்த காலங்களில் ஏற்படுத்திய வடுக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்தின் ஆட்டம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் நிலை

நியூசிலாந்து அணியால் அண்மைய T20 போட்டிகளில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. எனினும், உலகக் கிண்ண முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆனால் நியூசிலாந்து அடுத்ததாக ஆப்கானிஸ்தான் உடன் ஆடவிருந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

இலங்கை அணியின் நிலை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிர்ச்சி தோல்வியில் இந்து மீண்டும் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க நியூசிலாந்து மோதலில் கட்டாய வெற்றி பெற வேண்டி அழுத்தம் இலங்கை வீரர்களுக்கு காணப்படுகின்றது.

மேலும் நியூசிலாந்து ஒப்பீட்டு அளவில் இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொள்ளும் தொடரின் சிறந்த அணிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. எனவே சரியான திட்டமிடலுடன், அதனை களத்தில் செயற்படுத்த வேண்டியதன் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இருக்கின்றது.

மிச்சல் சான்ட்னர் மற்றும் வனிந்து ஹஸரங்க

இலங்கை முன்னணி அணியின் சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்கவிற்கு அவுஸ்திரேலிய அணியுடனான போட்டி சிறப்பாக அமையவில்லை. ஆனால் நியூசிலாந்தின் சுழல்வீரர் மிச்சல் சான்ட்னர் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற போட்டியில் திறமையை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இன்றைய போட்டியில் இரு அணிகளினதும் முன்னணி சுழல் வீரர்கள் இருவரும் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

உத்தேச அணி நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. சகலதுறைவீரரான டரைல் மிச்சல் தனது உபாதையில் இருந்து மீண்டிருப்பதனால் இலங்கை அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

பி(எஃப்)ன் அலன், டெவோன் கொன்வெய், கென் வில்லியம்சன் (தலைவர்), கிளன் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மார்க் சாப்மன், மிச்சல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌத்தி, லோக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்

உத்தேச அணி இலங்கை அணி

உபாதை காரணமாக பினுர பெர்னாண்டோ இலங்கை அணியில் இருந்து வெளியேறிய ஆறாவது வீரராக மாறியிருக்கின்றார். இன்றைய போட்டியில் பினுர பெர்னாண்டோவின் இடத்தினை கசுன் ராஜித அல்லது அசித பெர்னாண்டோ ஆகிய இருவரில் ஒருவர் நிரப்ப முடியும்.

தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, கசுன் ராஜித

மழையின் தாக்கம்

இலங்கை – நியூசிலாந்து போட்டி நடைபெறவுள்ள சிட்னி நகரில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாணய சுழற்சி

இந்த மைதானத்தில் ஏற்கனவே நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்த அணிகளே வெற்றி பெற்றதால், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

பேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், டெவோன் கான்வே
  • பேட்டிங்: தனஞ்சய டி சில்வா, ஃபின் ஆலன், க்ளென் பிலிப்ஸ், பதும் நிஷங்க
  • ஆல்-ரவுண்டர்: வனிந்து ஹசரங்க, மிட்செல் சான்ட்னர்
  • பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷனா, டிம் சவுத்தி, இஷ் சோதி

.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.