Sat. Dec 3rd, 2022

கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் தீ வைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தேடி பிடித்து கைது செய்து வருகின்றனர்.


இதன்படி, கடந்த 9 திகதி முதல் இன்று வரை 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


கடந்த மே மாதம் 9ஆம் திகதி முதல் நாடு முழுவதும் 707 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அவர்களில் 68 பேர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 170 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.


கடந்த 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலால் கோபமடைந்த மக்கள் அரச ஆதரவாளர்களை தேடி பிடித்து தாக்கியும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறிப்பினர்களின் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு சேதம் விளைவித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

தகவல்

Leave a Reply

Your email address will not be published.