Thu. Dec 1st, 2022

அமெரிக்காவின் நியுயோர்க் மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி சனிக்கிழமை பிற்பகல் பல்பொருள் அங்காடிக்குள் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு நுழைந்ததாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இச்சம்பவத்தில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்,என தெரிவித்த காவல்துறையினர் மேலதிக விபரங்களை தெரிவிக்கவில்லை

ஆனால் பெயரிடப்படாத அதிகாரிகள், NBC நியூஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களுக்கு, குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

நியுயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அப்பகுதியை தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.